நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தாலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தாலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
undefined
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டித்தீர்க்கும், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.