விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தாலும் சமீப நாட்களாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் காணை அருகே ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(25). இவர் ஆயுதப்படை காவலராக 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், இன்று காலை காவலர் குடியிருப்பில் பாதுகாப்பு பணிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிசுமைக் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.