விஷம் குடித்து மனைவி உயிரிழப்பு... துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை... சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

செஞ்சி அருகே தீராத வயிற்று வயிலால் விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையில் இருந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குராமத்தியே சோகத்தில் ஆழ்த்தியது. 

Gingee near Couple Suicide...Village plunged into tragedy

செஞ்சி அருகே தீராத வயிற்று வயிலால் விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையில் இருந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குராமத்தியே சோகத்தில் ஆழ்த்தியது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துகிருஷ்ணன்(64). இவரது மனைவி குணசாலி (59). தம்பதிக்கு 3 மகள்கள், அனைவரும் திருமணமாகிவிட்ட நிலையில் தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். 

Latest Videos

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் குணசாலி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வயலுக்கு சென்ற குணசாலி, பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, முத்துகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணசாலி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த முத்துகிருஷ்ணன், யாரிடமும் பேசாமல் இருந்தார். இதற்கிடையில் நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

click me!