வேன் மீது கார் பயங்கர மோதல்... உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு..!

By vinoth kumar  |  First Published May 8, 2019, 12:19 PM IST

விழுப்புரம் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்த பெண், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. 


விழுப்புரம் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்த பெண், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. 

மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் சக்திவேல் (வயது 75), இவருடைய மனைவி தங்கம் (68). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுடைய மகன் சந்திரசேகர் (47) சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சந்திரசேகர் வீட்டில் அவரது தாய், தந்தை இருவரும் தங்கியிருந்து வந்தனர். 

Latest Videos

இந்நிலையில் மதுரையில் உள்ள தங்கத்தின் உறவினர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிவக்குமார் சக்திவேல், அவரது மனைவி தங்கம், மகன்கள், திருமலைகுமார் (46), சந்திரசேகர், இவருடைய மனைவி வசுமதி (42), உறவினர்கள் மீனாட்சிசுந்தரம் (65), பார்வதி (60) ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றனர்.

அங்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர்கள் 7 பேரும் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சென்னை கொளத்தூரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணியளவில் விழுப்புரம் புறவழிச்சாலையில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரமாக வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் கார் மோதி விபத்துக்ககுள்ளானது. 

இந்தி விபத்தில் காரில் பயணம் செய்த சிவக்குமார் சக்திவேல், அவரது மனைவி தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மகன் சந்திரசேகர் (42), அவரது மனைவி வசுமதி, உறவினர்களான சென்னையைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி பார்வதி (60), மீனாட்சி சுந்தரம் (65) உள்ளிட்டோர் பலத்த காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில், பார்வதி தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. 

click me!