அரசு பேருந்து மீது வேன் மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Feb 16, 2019, 10:35 AM IST

திண்டிவனம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


திண்டிவனம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள விளங்கம்பாடி பகுதியில் வந்துகொண்டிருந்த வேன், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்து அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Latest Videos

வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நடந்த கோர விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதி்க்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்கள் வேனில் இருந்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, அவர்களின் உறவினரான உமாபதி, அவரது மனைவி விஜி என்பது தெரியவந்துள்ளது.

click me!