மணல் அள்ளிய தொழிலாளர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்து மாடு படுகாயம்...!

விழுப்புரம் அருகே வீரமூர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

villupuram firing cow injury

விழுப்புரம் அருகே வீரமூர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. villupuram firing cow injury

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போய் பதுங்கி கொண்டனர். 

Latest Videos

இதில் சீறிப்பாந்து வந்த துப்பாக்கிக் குண்டு மாட்டின் மீது பாய்ந்தது. இதில் மாடு படுகாயமடைந்தது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலை கேள்விப்பட்டு உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். யார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது என விசாரிப்பதாக மறியல் செய்தவர்களிடம் உறுதி அளித்துள்ளார். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!