விழுப்புரத்தில் மின்னல் தாக்கி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை காலை 6 மணி வரை அவ்வபோது விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. தொடர் கனமழை எதிரொலியாக பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
ஒரு பழத்துக்கா இவ்வளவு அக்கப்போறு? திண்டுக்கல்லை அதிர வைத்த துப்பாக்கி சத்தம்
undefined
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் போது சிறுமியின் வீட்டருகே இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சேமடைந்தன. இதன் விளைவாக ஏற்பட்ட அதிக வெளிச்சத்தால் சிறுமியின் கண் பார்வை பறிபோனதாகக் கூறப்படுகிறது.
பள்ளியில் விழுந்து கிடந்த பழங்களை சாப்பிட்ட மாணவனுக்கு நேர்ந்த சோகம்; சக மாணவர்கள் கதறல்
மின்னல் தாக்கிய சிறிது நேரத்திலேயே சிறுமியின் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகவே அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுமியின் முழு பார்வையும் பறிபோனது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.