ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்... வேலூரில் பரபரப்பு..!

Published : Dec 10, 2019, 01:52 PM IST
ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்... வேலூரில் பரபரப்பு..!

சுருக்கம்

வாணியம்பாடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது ஜெகன் மறைத்துவைத்திருந்த தாலியை எடுத்து இளம்பெண் கழுத்தில் கட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஜெகனை அடித்து உதைத்தனர்.

வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்தில் சென்றார். அப்போது, வாணியம்பாடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது ஜெகன் மறைத்துவைத்திருந்த தாலியை எடுத்து இளம்பெண் கழுத்தில் கட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஜெகனை அடித்து உதைத்தனர்.

பின்னர், பேருந்து வாணியப்பாடி வந்ததும் அங்கிருந்த போலீசாரிடம் ஜெகனை பயணிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல்துறையினர் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்க தாலி கட்டிய சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!