வேலூர் அருகே பழைய 25 பைசா நாணயம் கொண்டு வந்தால் பிரியாணி இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பலர் திரண்டனர்.
வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் புதியதாக பிரியாணி கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. கடையை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக உரிமையாளர் வித்யாசமான அணுகுமுறையை கையாண்டார். கடை திறக்கப்பட்ட முதல் நாள் காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் பழைய 25 பைசாவுடன் வருபவர்களுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பான விளம்பரங்களை போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டிருந்தார்.
undefined
ஒரு மணி நேரத்தில் பெரியதாக மக்கள் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்த உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடை வாசலில் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் திரள தொடங்கியது. அனைவரும் கைகளில் 25 பைசா நாணயடத்துடன் காத்திருந்தனர். செய்வதறியாது திகைத்த உரிமையாளர் பின்னர் முதலில் 25 பைசா நாணயங்களுடன் வந்த 200 பேருக்கு டோக்கன் வழங்கி இலவச பிரியாணியை கொடுத்தார்.
இதுகுறித்து கூறிய கடையின் உரிமையாளர், பழையவற்றை மக்களிடம் நினைவு செய்வதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் ஆனால் இவ்வளவு பேர் திரள்வார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். ஏற்கனவே திண்டுக்கல்லில் ஒரு கடையில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியும், டி ஷர்ட்டும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.