3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..! கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

Published : Mar 03, 2020, 05:39 PM IST
3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..! கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

சுருக்கம்

மனவேதனையில் இருந்த ஜெயந்தி இன்று காலையில் தனது குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அலுவலக வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து குழந்தைகள் மீதும் அவர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

வேலூர் அருகே இருக்கும் மேல்மொணவூரைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி ஜெயந்தி(35). இந்த தம்பதியினருக்கு சுவேதா (7), நிஷா (5) என்ற மகள்களும் ஜீவத் (6) என்ற மகனும் இருக்கின்றனர். குமரன் வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மேஸ்திரி வேலை செய்துகொண்டிருக்கிறார். குழந்தைகள் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமாக அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. பிறந்த குழந்தைகள் அனைத்தும் தனக்கு பிறந்தது அல்ல என ஜெயந்தியை குமரன் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ஜெயந்தி இன்று காலையில் தனது குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

மகன் கொடுமை தாங்க முடியல ஐயா.. எங்களை கருணை கொலை செஞ்சுருங்க..! பரிதவிக்கும் வயதான தம்பதி..!

அங்கு அலுவலக வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து குழந்தைகள் மீதும் அவர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்களும் பொதுமக்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர். குழந்தைகள் மீதும் ஜெயந்தி மீதும் உடனடியாக தண்ணீர் ஊற்றப்பட்டது. ஜெயந்தியை கண்டித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு காவல்துறையினர் உணவு வாங்கி கொடுத்தனர். தீக்குளிப்பது குறித்து அறியாத குழந்தைகள் பசியில் காவலர்கள் வாங்கி கொடுத்த உணவை உண்டது அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

'அவ இல்லாம வாழ முடியல'..! மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று தந்தை எடுத்த கோர முடிவு..!

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!