70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைக்கிராமம்..! இறந்தவர்கள் உடலை தொட்டில் கட்டி தூக்கிச்செல்லும் அவலம்..!

By Manikandan S R S  |  First Published Dec 11, 2019, 10:54 AM IST

சுதந்திரமடைந்த காலத்தில் மலைகிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கிராம மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வந்து செல்வதாகவும் அதன்பிறகு எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும் கூறுகின்றனர். 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது நெக்னாமலை கிராமம். இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர். பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கல்வி மருத்துவம், குடிநீர், மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனவும்  புகார் கூறப்டுகிறது.

Latest Videos

undefined

இந்த நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் மரணமடைந்து விட அவரது உடலை தொட்டிலில் கட்டி மலைகிராமத்திற்கு சுமந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் முனுசாமி(25). கோவையில் கட்டிட வேலை பார்த்து வந்த இவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு முனுசாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் கொண்டுவரப்பட்டு பின்னர் நெக்னாமலை மலை அடிவாரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் அதற்கு மேல் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதனால் முனுசாமியின் உடலை துணியில் சுற்றி மூங்கில் கம்பு ஒன்றில் தொட்டில் உருவாக்கி இரண்டு பேர் சுமந்து சென்றனர். இரவு நேரம் என்பதால் தீபந்தத்தின் உதவியுடன் கிராம மக்கள் மாறிமாறி முனுசாமியின் உடலை சுமந்து நள்ளிரவுக்கு மேல் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். இன்று அவருக்கு இறுதிசடங்கள் நடைபெறுகிறது.

சுதந்திரமடைந்த காலத்தில் மலைகிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கிராம மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வந்து செல்வதாகவும் அதன்பிறகு எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும் கூறுகின்றனர். இனியாவது அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மலைகிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

click me!