திலீபனின் குடும்பத்தினர் கடந்த 18ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்று திவ்யாவை அழைத்துவர சென்றனர். ஆனால் ஆடி மாதம் முடிந்தபிறகு அழைத்துச் செல்லும்படி அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆடி மாதம் என்பதால் தாய் வீடு சென்ற மனைவியை அழைத்து வர சென்றபோது ஏற்பட்ட தகராறில் சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன்(33). இவர் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வேயர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவரும் காதலித்துள்ளனர். நீண்ட நாட்களாக காதலித்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். திவ்யா எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியில் உள்ள மினி கிளினிக்கில் தற்காலிக மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
undefined
இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆடி மாதத்தையொட்டி திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து திலீபனின் குடும்பத்தினர் கடந்த 18ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்று திவ்யாவை அழைத்துவர சென்றனர். ஆனால் ஆடி மாதம் முடிந்தபிறகு அழைத்துச் செல்லும்படி அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது.
அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த திலீபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக திலீபன் திரும்பி வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது திலீபன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திலீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணமான 7 மாதத்தில் சர்வேயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.