எக்ஸ்ரே எடுப்பது போல் பலான இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. டாக்டரை டார் டாராக கிழித்த பொதுமக்கள்..!

Published : Jul 09, 2021, 03:17 PM ISTUpdated : Jul 09, 2021, 03:18 PM IST
எக்ஸ்ரே எடுப்பது போல் பலான இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. டாக்டரை டார் டாராக கிழித்த பொதுமக்கள்..!

சுருக்கம்

மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் எக்ஸ்ரே அறைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுப்பது போல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

எக்ஸ்ரே எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் குடியாத்தம்  ஜிபிஎம் தெருவில் உள்ள ஒரு தனியார் எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் எக்ஸ்ரே அறைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுப்பது போல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டபடி எக்ஸ்ரே அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

மேலும், பரிசோதனை மையத்தை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள் மையத்திற்கு உடனடியாக சீல் வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனே குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண், மருத்துவர் மற்றும் அவரது தம்பி ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!