அதிர்ச்சி செய்தி.. 2 டோஸ் போட்டுக்கொண்டு 43 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அரசு பெண் டாக்டர் கொரோனாவுக்கு பலி.!

By vinoth kumar  |  First Published Jul 8, 2021, 6:43 PM IST

கடந்த 43 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று திடீரென உடல்நிலை மோசமானதால் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்றிரவு ஹேமலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


வேலூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கொரோனா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா(47). இவர் கடந்த 2004ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தார். வேலூர் சைதாப்பேட்டையில் உள் நகர்புற அரசு ஆரம்ப சகாதார நிலையத்தில் 2016ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு காரோனா தொற்று உறுதியானது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையடுத்து, அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவருக்கு கடந்த 43 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று திடீரென உடல்நிலை மோசமானதால் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்றிரவு ஹேமலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் அவருக்கு நோய் தொற்று மிக தீவிரமாக இருந்ததால் தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறையின் தகவல் தெரிவித்துள்ளனர். 

click me!