ஐ.டி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை..? கொரோனா பதற்றத்தில் இந்தியா..!

By Manikandan S R SFirst Published Mar 5, 2020, 1:24 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு காரணமாக முன்னணி ஐ.டி நிறுவனங்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இயங்கிவரும் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப  நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 நாட்கள்  சிறப்பு விடுமுறை அளிக்கவும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் பணியாற்றும் (Work at Home)  அடிப்படையில் பணி செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3012 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். 

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் முதலில் கேரளாவில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக முன்னணி ஐ.டி நிறுவனங்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இயங்கிவரும் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கவும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் பணியாற்றும் (Work at Home)  அடிப்படையில் பணி செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐடிபிஎல்., இன்டெல், மான்யாத டெக்பார்க், இன்ேபாசிஸ் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர கண்காணிப்பில் 1,292 பேர்..! தமிழகத்தில் பீதியை கிளப்பும் கொரோனா..!

click me!