அதிர்ச்சி சம்பவம்.. நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்..!

By vinoth kumar  |  First Published Nov 1, 2021, 5:33 PM IST

போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், முரளிதரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, திரும்பி அதே இடத்துக்கு வந்தார். வாகனத்தின் ஆவணங்களை எஸ்ஐ குணசேகரனிடம் காண்பித்து, அவர் ஆய்வு செய்வதை செல்போனில் படம் பிடித்துள்ளார். 


வாணியம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சண்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன்  தலைமையில் போலீசார் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து சின்ன வேப்பம்பட்டு நோக்கி, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் முரளிதரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். 

Latest Videos

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

அப்போது, போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், முரளிதரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, திரும்பி அதே இடத்துக்கு வந்தார். வாகனத்தின் ஆவணங்களை எஸ்ஐ குணசேகரனிடம் காண்பித்து, அவர் ஆய்வு செய்வதை செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது, ‘‘என்னை ஏன் படம் பிடிக்கிறாய்?’’ என எஸ்ஐ கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு போட்டியாக வந்த ரவுடி கொடூர கொலை.. தந்தை மகன் அதிரடி கைது..!

செல்போனில்  படம் பிடித்ததை போலீசார் தடுத்தபோது, முரளிதரனுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எஸ்ஐ குணசேகரனும், முரளிதரனும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். பின்னர் பொதுமக்கள், போலீசாரிடம்  இருந்து தப்பமுயன்ற முரளிதரனை பொதுமக்கள் பிடித்து அங்கிருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர்.  பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- திருமண வீடு சாவு வீடாக மாறிய சோகம்.. மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.!

click me!