பிளடி ராஸ்கல் நாடகமா ஆடுற? நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் - மருத்துவமனையில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Jul 28, 2024, 8:12 PM IST
Highlights

ராணிபேட்டை மாவட்டத்தில் நிச்சயம் செய்த பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நபரை உறவினர்கள் சுற்றி வளைத்து திருமணம் செய்து வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், பெயிண்டர். இவரது மனைவி சாந்தி. இந்த  தம்பதியருக்கு 2 மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இளைய மகன் தினேஷ்குமார் (வயது 27). பூ அலங்கார வேலை செய்து வருகிறார். இதேபோல் கலவை கூட்ரோடு கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் - பரிமளா தம்பதியரின் மகள் லாவண்யா. இவர்கள் இருவருக்கும் இருவீட்டாரும் இணைந்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதற்கிடையில், கரிக்கந்தாங்கல் பகுதியில் கடந்த 9-ம் தேதி தினேஷ்குமார், லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, தினேஷ்குமார் தனது வருங்கால மனைவியான லாவண்யாவை அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளார். அவருக்கு ஒரு செல்போனையும் வாங்கி தந்துள்ளார். கடந்த 19ம் தேதி திடீரென தினேஷ்குமார் லாவண்யாவை பிடிக்கவில்லை திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார். இது பெண் வீட்டாரின் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெண் வீட்டார்  மாப்பிள்ளை வீட்டாரிடம் முறையிட்டு வந்தனர். இதற்கிடையில், தினேஷ்குமாருக்கு வேறு பெண்ணுடன் 15 பவுன் நகைகள் போட்டு திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகளும் அவரது வீட்டின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. 

Latest Videos

தமிழகத்தில் சமஸ்கிருதத்தை நுழையவிடமாட்டோம் என வீரவசனம் பேசியவர்கள் செய்யும் செயலா இது? அன்புமணி கேள்வி

இதனை கேட்டு ஆத்திரமடைந்த லாவண்யாவின் குடும்பத்தினர் தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து முறையிட்டுள்ளனர். இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் மூலமாக பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில்  தினேஷ்குமார் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சிறிதளவு சாப்பிட்டு விட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் எறும்பு மருந்தை சிறிதளவு சாப்பிட்டு விட்டு, நாடகம் ஆடியது லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். மேலும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில், தினேஷ்குமார் லாவண்யாவுக்கு மருத்துவமனையில் அதிரடியாக திருமணம் நடைபெற்றது. இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் பிரச்சினை பெரிதாகுவதால்  தினேஷ்குமாரை மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் ஏற்றி வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி

தொடர்ந்து, அவர்களுக்கு பதிவு திருமணம் நடத்தவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பெண்ணை பிடித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பிறகு வேண்டாம் மறுத்து தற்கொலை முயற்சி செய்ததாக நாடகம் ஆடிய மாப்பிள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு நிச்சியதார்த்தம் நடத்திய பெண்ணுடனே மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!