பிளாட்பார டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு..! ரயில்வே வாரியம் அதிரடி..!

By Manikandan S R S  |  First Published Mar 18, 2020, 10:12 AM IST

பொதுமக்கள் அதிகளவில் கூடும் ரயில்நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலை 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 147 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 இந்தியர்களும் 25 வெளிநாட்டினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நேற்று மஹாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவிற்கு பலியான நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

வேகமாக பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் ரயில்நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலை 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து அதிக அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் வருகிற பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையை தவிர்க்கும் விதமாக சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள் என கருதப்படும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ரூ.10  நடைமேடை அனுமதி (பிளாட்ஃபார்ம் ) கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டண முறை மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் நீட்டிக்கப்படலாம். இவ்வாறு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

click me!