தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில், புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை வருகிற 20-ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில், புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
undefined
அதில், பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது. ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் நாளை முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது.
சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தயிர் லிட்டர் ரூ.58-ல் இருந்து ரூ.62 ஆகவும் அதிகரிக்கிறது. இதனால், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்திய நிலையில் ஆண்டு தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.