வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்தில் கடந்த மே மாதம் சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பாம்பு கடிக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப் பகுதியில் கடந்த மே மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாம்பு ஒன்று கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மலை கிராமத்திற்கு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை அதன் பெற்றோர் தோளில் சுமந்துகொண்டு நடந்தே சென்றனர்.
ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அல்லேரி கிராமத்தில் தற்போது வரை தற்போது வரை சாலை அமைக்கப்படாத காரணத்தால் நோய்வாய்ப்படும் கிராமத்தினரை டோலி கட்டி தோளில் சுமந்து செல்லும் அவல நிலையே தொடர்கிறது.
undefined
நெல்லையில் இருசக்கர வாகனம், வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
சிறுமி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் கிராமத்தை ஆய்வு செய்து ஒருமாத காலத்தில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். மேலும் சாலை அமைப்பதற்கான அலவீடுகளும் மேற்கொள்ளப்பட்டனர்.
ஆனால் மலை கிராமம் என்பதால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், சாலை அமைப்பதை வனத்துறை தடுக்க முயற்சிப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிகாரிகள் அமைச்சரிடம் பொய்யான தகவலை வழங்குகின்றனர் - டெட்ரா பேக் குறித்து தங்கமணி கருத்து
இந்நிலையில், அல்லேரி மலைப்பகுதியில் வசித்து வந்த சங்கர் என்ற கூலித்தொழிலாளி மது அருந்திய நிலையில் தனது வீட்டின் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு உலாவிக்கொண்டிருந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சங்கர் அலறிய நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சங்கரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். மேலும் அல்லேரி கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், கிராமத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.