வயிற்று வலியால் துடித்த பெண்; கணவன் போன் எடுக்காததால் இளம் பெண் விபரீத முடிவு

By Velmurugan s  |  First Published Sep 19, 2023, 11:58 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்யா (வயது 19). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ஹரிஷ் (25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரிஷ் கூலி வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இரவு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விசேஷத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு ஹரிஷ் சென்றுள்ளார். இந்த நிலையில் திவ்யா வயிற்று வலியால் அவதி உற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பலமுறை ஹரிஷுக்கு திவ்யா போன் செய்தும் போனை எடுக்காத காரணத்தினால் மனம் உடைந்த திவ்யா வீட்டில் தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

உயிர்பலி வாங்கிய ஷவர்மா; அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்

பின்னர் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிய ஹரிஷ் வீட்டை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் வீட்டை திறக்காததால் மனைவி கோபத்தில் உள்ளார் என நினைத்துக் கொண்டு வீட்டின் வெளியே படுத்து உறங்கி உள்ளார். பின்னர் திவ்யாவின் மாமியார் செல்வி நீண்ட நேரம் ஆகியும் திவ்யா தூங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்து திரும்பவும் கதவை தட்டி உள்ளார். 

ஆனாலும், கதவு திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வேலையின்மையால் திண்டாடும் இளைஞர்கள்; பஜ்ஜி, போண்டா விற்ற காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மேலும் ஹரிசை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் அருகே திருமணமான ஆறு மாதத்தில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!