5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..! செல்போனில் படம் பிடித்து உயிர்விட்ட பரிதாபம்..!

Published : Mar 16, 2020, 03:42 PM ISTUpdated : Mar 16, 2020, 03:47 PM IST
5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..! செல்போனில் படம் பிடித்து உயிர்விட்ட பரிதாபம்..!

சுருக்கம்

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் தீபா தற்கொலைக்கு முயன்றார். உடலில் தீப்பற்றி எரியவே அலறிய தீபாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தீபாவை மீட்ட அவர்கள் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்  மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் தீபா(25). இவர் வசிக்கும் அதே ஊரைச் சேர்ந்தவர் ராகுல் (30). இருவரும் திருபத்தூரில் இருக்கும் ஒரு தனியார் டிவி ஷோரூமில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுனர். பின் திருப்பத்தூரில் வாடகை வீடு எடுத்து புதுமண தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்தனர்.

தீபா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீபா மன உளைச்சலில் இருந்திருக்கிறார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் தீபா தற்கொலைக்கு முயன்றார். உடலில் தீப்பற்றி எரியவே அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தீபாவை மீட்ட அவர்கள் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்  மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.

என் அழகின் ரகசியம் என்ன தெரியுமா..? கட்சிக் கூட்டத்தில் கலகலத்த குஷ்பு..!

இதையடுத்து உறவினர்களிடம் இருந்து தீபாவின் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி தீபாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைப்பது போன்றவற்றை தன் செல்போனில் தீபா படம் எடுத்து வைத்துள்ளார். அதைக்கைப்பற்றிய போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். காதல் திருமணம் செய்த சில மாதங்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!