வேலூர் கோட்டையில் மிதந்த ஆண் சடலம்; பொதுமக்கள் அச்சம் - அதிகாரிகள் விசாரணை

By Velmurugan s  |  First Published Sep 20, 2023, 10:52 AM IST

வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை அகழியில் ஆண் சடலம் ஒன்றில் கல்லை கட்டி சடலம் முழுவதும் துணியை சுற்றி அகழியில் அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்துள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் வேலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொது மக்களின் உதவியோடு அகழி நீரில் மிதந்த அந்த சடலத்தை மிட்டனர். 

சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். வேலூர் வடக்கு காவல்துறையினரும் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

சிறுமி உயிரிழந்த விவகாரம்; தமிழகம் முழுவதும் அதிரடி காட்டும் உணவு பாதுகாப்புத்துறை

அந்த நபரை யாராவது கடத்தி வந்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றனரா, கொலையானவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? முன் விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் கையில் கே.எஸ். சித்ரா என பச்சைகுத்தப் பட்டுள்ளது. இந்த கொலை சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!