தாறுமாறாக குவிந்திருக்கும் செல்லாத தபால் ஓட்டுகள்..! அலட்சியம் காட்டிய அரசு ஊழியர்கள்..!

By Manikandan S R SFirst Published Jan 2, 2020, 11:52 AM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகள் பல செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகளில் பல செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 தபால் வாக்குகள் பதிவான நிலையில் அதில் 96 ஓட்டுகள் செல்லாதவை ஆகியுள்ளன.

உச்சபட்சமாக ஒட்டன்சத்திரத்தில் 74 தபால் வாக்குகளில் 73 செல்லாதவையாக பதிவாகியுள்ளன. கொடைக்கானலில் 17 தபால் வாக்குகள் செல்லாதவையென தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முன்பாக தபால் ஓட்டு அளிப்பது வழக்கம். இந்தநிலையில் அரசு ஊழியர்களின் கவனக்குறைவால் அதிகளவில் செல்லாத ஓட்டுகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!