தொடரும் பருவமழை... 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

By vinoth kumarFirst Published Jan 1, 2020, 1:01 PM IST
Highlights

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், வளிமண்டலத்தின் கீழ்பகுதியில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால், சென்னை, சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, வண்டலூர், காஞ்சிபுரம், வேலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

ஜனவரி 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், வளிமண்டலத்தின் கீழ்பகுதியில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால், சென்னை, சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, வண்டலூர், காஞ்சிபுரம், வேலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் செம்மஞ்சேரி, கோளப்பாக்கத்தில் தலா 4 செ.மீ., கொளப்பாக்கம், விமான நிலையம், குன்னூரில் தலா 3 செ.மீ, சோழிங்கர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், நுங்கம்பாக்கம், உத்தரமேரூரில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை, மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!