தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
undefined
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது உரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு லட்சத்தீவு பகுதிகளுக்கும், நாளையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளுக்கும், தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.