வேலூரில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பாதிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 19, 2020, 2:36 PM IST
Highlights

வேலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியிருக்கிறது.

வேலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியிருக்கிறது.

தமிழகத்தில் அழையா விருந்தியாளியாக வந்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர அவசரமாக சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், சென்னையில் இருந்து ஊர் திரும்பும் மக்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும், மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களால் மற்ற நபர்களும் கொரோனாவினால் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் 59 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மண்டித்தெருவில் உள்ள அரிசி கடையில் பணியாற்றிய 29 வயது வாலிபருக்கு கடந்த 14-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!