11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Published : Jul 11, 2020, 03:22 PM ISTUpdated : Jul 11, 2020, 03:43 PM IST
11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்;- கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை சேலம் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணி 8 செ.மீ., வெம்பாக்கத்தில் செ.மீ., மழையும்  பதிவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!