கொரோனாவால் நூற்றாண்டு கால பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா முதல்முறையாக ரத்து

By karthikeyan VFirst Published Apr 24, 2020, 9:37 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தலால் நூறு ஆண்டுக்கும் மேலாக நடத்தப்பட்டுவரும் குடியாத்தம் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

கொரோனா ஊரடங்கால் அனைத்துவிதமான சமூக பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள் என அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கொரோனாவிலிருந்து மீள சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம். அனைத்து சமூக கூடல் தொடர்பான அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகெங்கையம்மன் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகெங்கையம்மன் கோவில் திருவிழா நூற்றாண்டு காலம் பிரசித்தி பெற்றது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. மே மாத மத்தியில் நடக்கும் இந்த திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம், தேரோட்டம் என மிகவும் விமரிசையாக இருக்கும். 

ஆனால் கொரோனா ஊரடங்கால் இந்த முறை ஸ்ரீகெங்கையம்மன் கோவில் திருவிழாவை ரத்து செய்வது என கோவில் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மே 14ம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழா மட்டுமல்லாது, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

click me!