தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து..! பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..!

By Manikandan S R S  |  First Published Jan 14, 2020, 11:23 AM IST

ஆம்பூர் அருகே தொழிற்சாலை குடோன் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறியதாக பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதில் தொழிற்சாலை குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Tap to resize

Latest Videos

undefined

திடீரென நிகழ்ந்த தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தது. ஆனால் வரும் வழியிலேயே தீயணைப்பு வண்டி ஒன்று பழுதாகி நின்றுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்த வாகனத்தை தள்ளி தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு தீயை அணைக்கும் பணி தொடங்கியது. தீ விபத்து நிகழ்ந்தது ஒரு சிறிய குடோனில் என்று கூறப்படுகிறது.

ஆனால் அந்த பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகள் நிறைந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்பூர்,வாணியம்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Also Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!

click me!