நீதிமன்ற வளாகத்திலேயே போலீஸ் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Jul 22, 2023, 9:23 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில்  அடிதடி வழக்கில்  விசாரணை அதிகாரிக்கு நீதிமன்ற வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  கைது.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் திருப்பத்தூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணை அமைப்பளாராக உள்ளார். இந்நிலையில் வினோத் மீது கடந்த 2016ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு அதற்கான வழக்கு விசாரணை நேற்று  திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. 

இந்நிலையில் வினோத் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது அடிதடி வழக்கில் 2016ம் ஆண்டில்  ஆலங்காயம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதன் என்பவர் வினோத்திற்கு எதிரான வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடித்த பின்னர் விசாரணைக்கு அதிகாரியாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது நீதிமன்ற வளாகத்திலேயே வினோத்  ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

கோவில் திருவிழாக்களில் பக்தி இல்லை; யார் பலசாலி என்ற போட்டி தான் உள்ளது - நீதிமன்றம் வேதனை

பின்னர் இதுகுறித்து ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை தேடி வந்த நிலையில், கடந்த ஜூன் 27ம் தேதி நிம்மியம்பட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் காரை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் ஆலங்காயம் காவல்நிலையத்தில் அதற்கான நிபந்தனை ஜாமீனில் கையொழுத்திட்டு வெளியே வந்த போது திருப்பத்தூர் நகர காவல்துறையினர் வினோத்தை கைது செய்தனர்.

“தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்” டியூசன் வருவதை நிறுத்தியதால் தனியார் பள்ளி ஆசிரியை அத்துமீறல்?

click me!