உயிரோடு இருக்கும் [மண]மகளுக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பயங்கர கோபக்கார அப்பா...

Published : Jun 10, 2019, 03:31 PM IST
உயிரோடு இருக்கும் [மண]மகளுக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பயங்கர கோபக்கார அப்பா...

சுருக்கம்

பொதுவாக பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொள்ளும் பிள்ளைகளை நோக்கி ‘நீ செத்துட்டதா நினைச்சுக்கிறேன்’என்றுதான் கோபத்தில் குமுறுவார்கள். ஆனால் அவர்களையெல்லாம் மிஞ்சிய கோபக்காரத் தந்தை ஒருவர் கைக்காசை செலவழித்து மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.

ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த சரவணன் தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் வேற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்தார்.இதனால் ஆத்திரத்தில் இருந்த சரவணன் தனது மகள் இறந்துவிட்டதாக ஊரை சுற்றிலும் இன்று கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தார். அந்த பேனரில் தனது மகள் நேற்று மதியம் இறந்துவிட்டதாகவும் அவளது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யபடுகிறது என வாசகம் எழுதப்பட்டுள்ளது.இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுன போஸ்டர்கள்ல ஒண்ணேஒண்ண மட்டும் பத்திரப்படுத்தி வைங்க சரவணன் சார். உங்க மக பேரன், பேத்தியோட வர்றப்ப மலரும் நினைவுகள் நிகழ்ச்சியைப் பகிர்ந்துக்க பயன்படும்.
 
PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!