திருப்பத்தூரில் அசுர வேகத்தில் வந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்

Published : Feb 14, 2024, 07:26 PM IST
திருப்பத்தூரில் அசுர வேகத்தில் வந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்

சுருக்கம்

திருப்பத்தூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் தனியார் பள்ளி அருகில் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த புவனா (வயது 35) அவருடைய குழந்தைகள் யாசிகா(14), பிரேம் (9) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது எதிர் திசையில் வந்த விசுவாசம் பட்டி பகுதியைச் சேர்ந்த விக்டர் ஜோஸ்வா(18) அவருடைய தோழி ரோஸ் லீட்டா (20) மற்றும் வேணுகோபால் என மூவரும் ஒரே வண்டியில் வந்து கொண்டிருந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர் பாராத விதமாக திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

கோவை மக்களவை தொகுதியில் போட்டியா? இருக்குற வேலையவே பாக்க முடியல - அண்ணாமலை பதில்

இந்த விபத்தில் 2 இருசக்கர வாகனங்களின் முன் பகுதிகளும் அப்பளம் போல் நொறுங்கின. மேலும் விபத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ‌அனைவரும் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காதலர் தின கொண்டாட்டம்; தஞ்சை பெரியகோவிலில் தாலியுடன் சுற்றி திரிந்த இந்து மக்கள் கட்சியினர் - எச்சரித்து அனுப்பிய போலீஸ்

விபத்து தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!