ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர், உயிரிழப்பு 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்றதால் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில். இறந்தவர்கள் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 50), பெங்களூருவைச் சேர்ந்த ரோஜா (55), சிவா (32) என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெங்களூரை சேர்ந்த மாதவன் வயது 57, குமரேஷ் வயது 40, குடியாத்தத்தைச் சேர்ந்த சாந்தி வயது 45 ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.