அதிவேகத்தில் சென்று புளியமரத்தில் பயங்கரமாக மோதிய கார்..! இருபெண்கள் உடல் நசுங்கி பலி..!

Published : Mar 16, 2020, 04:22 PM ISTUpdated : Mar 16, 2020, 04:31 PM IST
அதிவேகத்தில் சென்று புளியமரத்தில் பயங்கரமாக மோதிய கார்..! இருபெண்கள் உடல் நசுங்கி பலி..!

சுருக்கம்

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்றது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். அதிவேகத்தில் வந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் ஒருபகுதி அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த விஜயா, ராஜேஸ்வரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இருக்கிறது முருகம்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி விஜயா(55). இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஸ்வரி(53), பிரேமா(40) மற்றும் சாமுண்டீஸ்வரி(45). மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக ஒரு காரில் மேல்மருவத்தூர் புறப்பட்டனர். காரை அதே ஊரைச் சேர்ந்த அஜித் குமார்(24) என்பவர் ஓட்டி வந்தார்.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்றது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். அதிவேகத்தில் வந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் ஒருபகுதி அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த விஜயா, ராஜேஸ்வரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

என் அழகின் ரகசியம் என்ன தெரியுமா..? கட்சிக் கூட்டத்தில் கலகலத்த குஷ்பு..!

பிரேமா, சாமுண்டீஸ்வரி மற்றும் ஓட்டுநர் அஜித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காயம்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விஜயா, ராஜேஸ்வரி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..! முதன்முறையாக காவல்துறை அதிரடி..!

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!