பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய மாணவி விபத்தில் பலி

By Velmurugan s  |  First Published Sep 7, 2023, 10:51 AM IST

இராணிபேட்டை மாவட்டத்தில் பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். மகளுக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனது.

அதற்று முன்னதாக மாமியார் தெய்வமணி, மகன் ஆகாஷ் (9) மகள் எட்டாவது வகுப்பு பள்ளி மாணவி அனுசுயா (13), பெற்றோர் என ஐந்து பேரும் அவர்களது மகள் அனுசியா பிறந்த நாளை முன்னிட்டு ரெடிவலம் பகுதியில் உள்ள கோவிலுக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இளநீர் வெட்டும்போது துண்டான கட்டை விரல்; அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிய மருத்துவர்கள்

அப்போது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் மீது இருக்கர வாகனம் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி அனுசியா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கிருஷ்ணஜெயந்தியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவனை பிணமாக மீட்ட அதிகாரிகள்; சோகத்தில் உறவினர்கள்

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவி அனுசுயாவின் உடல் மீட்கப்பட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!