அக்காளின் மரண செய்தி கேட்டு துக்கத்தில் உயிரிழந்த 102 வயது தம்பி; திருப்பத்தூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

By Velmurugan s  |  First Published Nov 21, 2023, 11:10 PM IST

திருப்பத்தூரில் 104 வயதில் அக்காள் உயிரிழந்த செய்தி அறிந்த் 102 வயது தம்பி சோகத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருடைய மனைவி வள்ளியம்மாள் வயது (104 ) இவர் நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் இவரது தம்பி துரைசாமி (வயது 102) இவருக்கு வள்ளியம்மாள் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கேட்ட அவர் ஒரே இடத்தில் வேதனையில் அமர்ந்திருந்தார், நேற்று இரவு மயங்கி விழுந்து அவர் இறந்து போனார்.

கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்

Tap to resize

Latest Videos

undefined

அக்காள் இறந்த அதிர்ச்சியில் தம்பி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இறந்து போன வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் 43 பேர குழந்தைகள் வள்ளியம்மாளுக்கு உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதேபோல் துரைசாமிக்கு நான்கு  மகன்களும்,  இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு 57 பேரக் குழந்தைகள் உள்ளனர். இறந்து போன துரைசாமியின் மகன் அண்ணாமலை செட்டியப்பனூர் முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இறந்து போன வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்கள் இன்று மாலை அதே ஊரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

click me!