இரண்டாவது திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம் பெண் தர்ணா

By Velmurugan sFirst Published Jul 14, 2023, 7:57 PM IST
Highlights

திருச்சி அருகே கணவன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் புகார் கொடுத்தும்  அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை - அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 23 ). இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (29) என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் கலையரசிக்கு தெரியாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது திருமணம் குறித்து தகவல் அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று மாத காலமாக காவல் நிலையத்திற்கு அலைந்த இளம் பெண் கலையரசி இறுதியாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசல் முன்பாக இன்று காலை அமர்ந்து கணவன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி 

காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இல்லாத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் இளம் பெண் தர்ணா போராட்டத்தினால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முசிறியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி காவல் உதவி ஆய்வாளர்கள் கோகிலா மற்றும் பிரியா போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசியை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று விசாரணை செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

திடீரென சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை; குழந்தையை காப்பாற்ற வீட்டுக்குள் பேருந்தை செலுத்திய ஓட்டுநர்

இதையடுத்து கலையரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவர் மீது நடவடிக்கை எடுக்காத  கண்டித்து இளம் பெண் காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!