திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
புதிதாக தமிழ்நாடு காவல்துறை தலைவராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், கரூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
undefined
இந்த கூட்டத்தின்போது, திருச்சி உறையூரில் இரண்டு நாட்களுக்கு முன் திருடு போன நகைகளை விரைவாக புலன் விசாரணை செய்து மீட்கப்பட்டதற்கு அதிகாரிகளை பாராட்டிய சங்கர் ஜிவால், அவர்களுக்கு சன்மானம் வழங்கினார்.
தொடர்ந்து, அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு தொடர்பான நடைமுறைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஈடுபட்டார். அதன்பின்னர் தஞ்சை சரக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் பொருட்டு, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்றார்.