ஷாக்கிங் நியூஸ்.. திருச்சி ஸ்ரீரங்கத்தில் 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள்.!

By vinoth kumar  |  First Published Aug 16, 2023, 3:22 PM IST

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுக்கின்றனர். 


 திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரித்த போது குழந்தையை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுக்கின்றனர். பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதால், பொதுமக்களும் பரிதாபப்பட்டு அதிக அளவில் உதவுகின்றனர். ஆனால், ஒரு கும்பல் பணத்துக்காக குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- என் புருஷன் இருக்கும் வரைக்கும் உல்லாசமாக இருக்க முடியாது!ஸ்கெட்ச் போட்டு கொலை!உடலை என்ன செய்தார்கள் தெரியுமா?

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு  திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்டத்தை பயன்டுத்தி குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;-  தந்தையை கட்டையால் அடித்து கொன்ற திமுக பிரமுகர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போது 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளை 500 ரூபாய்க்கு வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள் செய்தியாளர்களை பார்த்ததும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!