இரண்டு ஆம்னி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து நேற்று இரவு சொகுசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி கிளம்பியது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். மாற்று ஓட்டுனராக திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இருக்கும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
undefined
அந்த பேருந்தின் பின்னால் சென்னையை நோக்கி மற்றொரு சொகுசு பேருந்து திருச்சியிலிருந்து வந்தது. அதை சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். விஜயகுமார் ஓட்டிச் சென்ற சொகுசு பேருந்திற்கு முன்னால் வேன் ஒன்று சென்றுள்ளது. எதிர்பாராதவிதமாக வேன் டிரைவர், வேனை சாலை ஓரமாக திருப்பி இருக்கிறார். அதை எதிர்பார்க்காத விஜயகுமார் வேன் மீது பஸ் மோதல் இருப்பதற்காக சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது சொகுசு பேருந்தில் பின்னால் வந்த மற்றொரு பேருந்து ஓட்டுநர் சிவகுமார், பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, விஜய குமார் ஓட்டிச்சென்ற பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பேருந்தில் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவலர்கள், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.