சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இன்று அதிகாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வந்த போது அதே சாலையின் எதிரே திருச்சி நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்துள்ளது. அதிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
undefined
எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இரு பேருந்துகளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியது. பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அலறி துடித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயம்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.