அம்பானி இல்ல திருமணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு! திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது!

By vinoth kumar  |  First Published Mar 18, 2024, 12:57 PM IST

முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது.  


குஜராத்தில் நடந்த ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியின் போது திருடியதாக திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி! ஏரியில் மூழ்கடித்து கொலை! நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி? பகீர்!

இதில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழில் அதிபர்கள்,  அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:  jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?

இந்நிலையில்,  அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் உள்ளிட்டவை திருடப்பட்டதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார்,  திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த ஜெகன் பாலசுப்பிரமணியம், தீபக் பார்த்திபன், குணசேகர் உமாநாத், வீரபத்ரன், அகரம் கண்ணன் ஆகிய 5 பேரை டெல்லியில் கைது செய்தனர்.  மேலும்,  இந்த திருட்டு கும்பலின் தலைவன் மதுசூதனை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!