ஆசிரியர்களுக்கு ரெடியாகிறது ஆப்பு... ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் அமைச்சர் செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Nov 19, 2019, 12:24 PM IST
Highlights

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவது குறித்து ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர்  செங்கோட்டையன் கூறியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவது குறித்து ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர்  செங்கோட்டையன் கூறியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூர்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 62-வது (2019-2020-ம் ஆண்டு) குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். 

இன்னும் ஒரு மாதத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதியுடன் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் வழங்கப்படவுள்ளது. டிசம்பா் இறுதிக்குள் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும். மேலும், நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொதுதேர்வு நடைபெறும். இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்கள் இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என அஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

click me!