திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேராசிரியர் மிரட்டுவதாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மாணவி ஜெனிபர். திருச்சி காஜாமலைப்பகுதியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக ஜெனிபர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
undefined
இந்த நிலையில் நேற்று விடுதி அறையில் இருந்த ஜெனிபர், பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஜெனிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் அறையில் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் கல்லூரியில் நடந்த சில பிரச்சனைகளை குறிப்பிட்டு ஜெனிபர் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: காவு வாங்கிய விளம்பர வெறி..! அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் இளம்பெண்ணின் கால் அகற்றம்..!
மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெனிபரின் தோழிகள், கல்லூரி பேராசிரியர் மீது சரமாரியாக குற்றசாட்டுகளை தெரிவித்தனர். மாணவ மாணவிகளின் செல்போனில் இருக்கும் புகைப்படங்களையும், அந்தரங்க விபரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்த அந்த பேராசிரியர், தொடர்ந்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேலுமொரு வெளிமாநில மாணவி தற்கொலை..! விடுதி காப்பாளர் மீது தோழிகள் சரமாரி குற்றசாட்டு..!