திருச்சி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். மேலும் திருச்சியில் ஒலிம்பிக் போன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் பங்கேற்கும் விதமாக உயர் ரக ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் எது நடந்தாலும், அது பிரமாண்டமாகத்தான் நடக்கும். சிறிய விழாவாக இருந்தாலும், அது பெரிய அரசு விழாவாகத்தான் நடக்கும்! பெரிய பொதுக்கூட்டமாக இருந்தாலும், அதனை மாபெரும் மாநாடாகத்தான் திருச்சியில் காணலாம்! மாநாடு என்று அறிவித்தால், பிரமாண்டமான மாநாடாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால்தான் அது திருச்சி! அப்படி நடத்தினால்தான் அது கே.என்.நேரு!
அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகின்றனர் - முதல்வர் பெருமிதம்
undefined
அந்தப் புகழை, இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறையின் மூலமாக தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றைக்கு ஏராளமாகச் செய்து வருபவர் தான் அமைச்சர் நேரு அவர்கள்!
* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு
* மணிமேகலை விருது
* மாநில அளவிலான வங்கியாளர் விருது
* முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்தல்
* புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
* நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - என
ஆறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது!
இந்த விழாவில், 22 ஆயிரத்து 716 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு 79 கோடியே 6 லட்சம் ரூபாய். இன்று மட்டும் 5,635 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். இவற்றின் மொத்த மதிப்பு 238 கோடியே 40 லட்சம் ரூபாய். இன்று மட்டும் 5951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 308 கோடியே 29 லட்சம் ரூபாய்.
ரத்தத்தில் படம் வரைவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - அமைச்சர் எச்சரிக்கை
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், 625 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயன்கள் திருச்சி மாவட்டத்திற்கு அளிக்கும் மாபெரும் விழாதான் இந்த விழா.
ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, நம் மாநில இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், அதாவது 21-4-2022 அன்று சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்திருந்தேன்.
அந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவுத்திறனில், தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல நமது தமிழ்நாடு உலகத்தோடு போட்டியிட வேண்டும். அதற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும் துணையாக இருக்கும்.