நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

By Manikandan S R SFirst Published Oct 28, 2019, 8:47 AM IST
Highlights

ஆழ்துளை கிணறு இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதிகாலை முதலே மேகங்கள் திரண்டு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

திருச்சி அருகே இருக்கும் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 60 மணிநேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்பதற்காக மீட்புப் படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். 

ராட்சத இயந்திரங்கள் மூலமாக ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டி அதனுள்ளே மூன்று வீரர்கள் அனுப்பப்பட்டு குழந்தை மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பள்ளம் தோண்டப்படும் இடத்தில் அதிகமான அளவில் பாறைகள் இருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 40அடி தோண்டப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இதனிடையே ஆழ்துளை கிணறு இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதிகாலை முதலே மேகங்கள் திரண்டு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது. எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக மீட்டு கொண்டுவர மீட்பு படையினர் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!