திருச்சியில் டாஸ்மாக் கடை அருகே காயங்களுடன் கிடந்த முன்னாள் ராணுவ வீரர் - உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published May 25, 2023, 10:01 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு டாஸ்மாக் அருகில் காயங்களுடன் கிடந்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஒத்தத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன். மகன் ரமேஷ் (வயது 45). இவர் முன்னாள் ரானுவ வீரர்.  இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குடிபழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை லால்குடி அருகே கொப்பாவளி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே கை மற்றும் முகம் பகுதிகளில்  காயங்களுடன் கிடந்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக லால்குடிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

“சாராயக்கடை சந்து” திருச்சியில் தெருவுக்கு சர்ச்சை பெயர் சூட்டிய அதிகாரிகள்

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற மாம்பழத் தேரோட்டம்

click me!