48 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Jan 22, 2020, 2:36 PM IST
Highlights

வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10 ம் தேதியுடன் முற்றிலும் விலகியது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வரும் கோடைகாலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பருவ மழை நிறைவடைந்து விட்டபோதும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் வலுவான காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

Also Read: ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!

click me!