பணிக்காக மலேசியா நாட்டில் இருக்கும் மகன், நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளாததால், மகனை மீட்டு தர வேண்டும் என் அவர்களது பெற்றோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருச்சியில் மக்கள் குறைதர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தல் ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் கலந்துகொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அப்போது, பணிக்காக மலேசியாவிற்கு சென்ற மகனை மீட்டு தர வேண்டும் எனக்கோரி ஒரு பெற்றோர் மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தனர். அவர் கொடுத்த மனுவில், தனது மகன் மணி கேட்டரிங் வேலைக்காக கடந்த 2020-ம் ஆண்டு மலேசிய நாட்டிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அங்கு பணிபுரிந்துகொண்டே எங்களுடன் மாதந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
இந்நிலையில், கடந்த 7 மாதமாக மகன் மணியிடமிருந்து எந்த அழப்பும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளானர். அவருடன் பணிபுரிந்த திருச்சியை நேர்ந்த சக நண்பர்களிடம் விசாரித்த போது, எனது மகன் மணி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே, எனது மகன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பது கூட தெரியவில்லை. உடனடியாக தனது மகனை மீட்டு தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஆட்சியர் பிரதீப் குமார், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்